Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைவருக்கும் பொருத்தமான வாய்ப்பொன்று இருக்கும் பட்சத்தில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மனை விட்டு அக்கழகத்தின் முன்களவீரரான நெய்மர் விலகலாம் என அக்கழகத்தின் விளையாட்டுப் பணிப்பாளர் லியனார்டோ தெரிவித்துள்ளார்.
பருவகாலத்துக்கு முந்தையதான முதல் நாள் பயிற்சிக்கு கடந்த திங்கட்கிழமை நெய்மர் சமூகமளிக்காத நிலையில், தான் பொருத்தமான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பரிஸ் ஸா ஜெர்மைன் தெரிவித்துள்ளது.
ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவிலிருந்து 222 மில்லியன் யூரோக்களுக்கு பரிஸ் ஸா ஜெர்மைனில் 2017ஆம் ஆண்டு ஓகஸ்டில் இணைந்த 27 வயதனா நெய்மர், மீண்டும் பார்சிலோனாவுக்கு திரும்பப் போவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நெய்மரை ஒப்பந்தம் செய்வதற்கான எதுவிதக் கோரிக்கைகளையும் பரிஸ் ஸா ஜெர்மைன் பெறவில்லை எனத் தெரிவித்துள்ள லியனார்டோ, பார்சிலோவுடன் மிகவும் மேலோட்டமான தொடர்புகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பரிஸ் ஸா ஜெர்மனை விட்டு விலகுவதற்கு நெய்மர் வினவினாரா என வினவப்பட்டதற்கு, “இது எல்லோருக்கும் தெளிவானது. ஆனால், கால்பந்தாட்டத்தில் இன்று ஒன்றை நீங்கள் கூறுவீர்கள். நாளை இன்னொன்றை கூறுவீர்கள்” என லியனார்டோ பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், தொண்டு வேலைகளிருப்பதால் திங்கட்கிழமை பயிற்சியை நெய்மர் தவறவிடுவார் என பரிஸ் ஸா ஜெர்மைன் அறிருந்திருந்ததாக நெய்மரின் தந்தை கூறியுள்ளார்.
16 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago