Editorial / 2018 ஒக்டோபர் 24 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}


பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் இன்றிரவு 9.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் இத்தொடருக்கு முன்பதாக முதலாமிடத்தில் பாகிஸ்தானும் மூன்றாமிடத்தில் அவுஸ்திரேலியாவும் காணப்படுகின்ற நிலையில், 3-0 என இத்தொடரில் பாகிஸ்தானை அவுஸ்திரேலியா வெள்ளையடித்தால் முதலாமிடத்துக்கு அவுஸ்திரேலியா முன்னேறும் என்பதோடு, 2-1 என தொடரை வென்றால் இரண்டாமிடத்துக்கு முன்னேறும். மற்றைய எந்த தொடர் முடிவுகளும் அவுஸ்திரேலிய அணியின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது.
மறுபக்கமாக 0-3 என வெள்ளையடிக்கப்பட்டால் மாத்திரம் இரண்டாமிடத்துக்கு பாகிஸ்தான் கீழிறங்கும் என்பதோடு, வேறெந்த தொடரின் முடிவும் பாகிஸ்தானின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான பெறுபேறுகள் காரணமாக முதலிடத்தில் பாகிஸ்தான் இருப்பதற்கு காரணமான சிரேஷ்ட வீரர் ஷொய்ப் மலிக், இளம் வீரர்கள் பாபர் அஸாம், ஷடாப் கான் ஆகியோர் தொடர்ந்து பிரகாசிக்கும் பட்சத்தில் இத்தொடரையும் பாகிஸ்தான் கைப்பற்றலாம். இவர்களுக்கு மேலதிகமாக காயத்திலிருந்து குணமடைந்து அணிக்குத் திரும்புகின்ற இமாட் வஸீம் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோரும் அணிக்கு பலம் சேர்ப்பார்கள்.
மறுபக்கமாக, டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா இத்தொடரிலாவது வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு களமிறங்குகிறது. அடுத்தாண்டு உலகக் கிண்ணம் இடம்பெறவுள்ள நிலையில் அணியில் தமது இடங்களை கிறிஸ் லின், டார்சி ஷோர்ட், நேதன் கூல்டர்நைல், பில்லி ஸ்டான்லேக், நேதன் லையன், அஸ்தன் அகருக்கான வாய்ப்பாக இத்தொடர் காணப்படுகிறது.
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago