Editorial / 2018 நவம்பர் 04 , பி.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}


ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், பார்சிலோனா, றியல் மட்ரிட் ஆகிய அணிகள் வென்றுள்ளன.
றயோ வலிக்கனோ அணியின் மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் இறுதி நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸ் பெற்ற கோலோடு 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக, லூயிஸ் சுவாரஸ் இரண்டு கோல்களையும் உஸ்மான் டெம்பிலி ஒரு கோலையும் பெற்றதோடு, றயோ வலெக்கனோ சார்பாக, ஜொஸே போஸீ, அல்பேர்டோ கர்சியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற றியல் வல்லடொலிட் அணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது. றியல் மட்ரிட் சார்பாக, வின்சியஸ் ஜூனியர், சேர்ஜியோ றாமோஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அந்தவகையில், தமது கடந்த ஆறு லா லிகா போட்டிகளில் றியல் மட்ரிட் பெற்றுக் கொண்ட முதலாவது வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, லெகனிஸ் அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் சமநிலையில் முடித்துக் கொண்டது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்டோனி கிறீஸ்மன் பெற்றதோடு லெகனிஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை குய்டோ கரில்லோ பெற்றிருந்தார்.
அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் லா லிகா புள்ளிகள் தரவரிசையில் பார்சிலோனா 24 புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்படுவதோடு, 20 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட் காணப்படுவதோடு, 17 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் றியல் மட்ரிட் காணப்படுகின்றது.
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago