Shanmugan Murugavel / 2024 மே 08 , பி.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான எவெர்ற்றனின் கோல் காப்பாளர் ஜோர்டான் பிக்ஃபோர்ட், இன்னொரு பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலின் கோல் காப்பாளர் ஆரோன் ரம்ஸ்டேலைக் கைச்சாத்திட பிறிதொரு பிறீமியர் லீக் கழகமான செல்சி எதிர்பார்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எவெர்ற்றனுடன் இன்னும் மூன்றாண்டு ஒப்பந்தத்தை பிக்ஃபோர்ட் கொண்டுள்ள நிலையில், ஆர்சனலுடன் இன்னும் இரண்டாண்டு ஒப்பந்தத்தை ரம்ஸ்டேல் கொண்டுள்ளார்.
பிறீமியர் லீக் கழகமான பிரென்ஃபோர்ட்டிலிருந்து டேவிட் ரயாவை நிரந்தரமாகக் கைச்சாத்திட்ட பின்னர் ரம்ஸ்டேலை வெளியேற ஆர்சனல் அனுமதிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றபோதும், பிக்ஃபோர்ட்டுக்கு அதிக விலையை எவெர்ற்றன் கோருமென எதிர்பார்க்கப்படுகிறது.
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago