Shanmugan Murugavel / 2024 மார்ச் 25 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிநேகபூர்வப் போட்டிகளில், தம் நாட்டில் நேற்று அதிகாலை நடைபெற்ற ஜேர்மனியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் தோற்றது.
ஜேர்மனி சார்பாக, புளோரியன் ரிட்ஸ், கை ஹவேர்ட்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, இங்கிலாந்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வென்றது. பிரேஸில் சார்பாகப் பெறப்பட்ட கோலை என்ட்ரிக் பெற்றிருந்தார்.
இந்நிலையில், எகிப்தில் நடைபெற்ற குரோஷியா, துனீஷியாவுக்குமிடையிலான போட்டியானது வழமையான நேரத்தில் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்த நிலையில், பெனால்டியில் 5-4 என்ற ரீதியில் குரோஷியா வென்றது.
இதேவேளை டென்மார்க்கில் நடைபெற்ற அவ்வணிக்கும், சுவிற்ஸர்லாந்துக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இந்நிலையில், தம் நாட்டில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற பெல்ஜியத்துடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து சமப்படுத்தியது.
23 minute ago
24 minute ago
33 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
24 minute ago
33 minute ago
51 minute ago