Editorial / 2018 ஏப்ரல் 08 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு வருடத் தடைக்குப் பின்னர் மீண்டும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளுக்குத் திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்துள்ளம.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மைதானத்தில் நடைபெற்ற இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் டுவைன் பிராவோவின் அதிரடியில் ஒரு விக்கெட்டினால் வெற்றியை தனதாக்கியது சென்னை அணி.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை, மும்பை இந்தியன்ஸுக்கு வழங்கியது.
இஷான் கிஷன், (40) சூரியகுமார் யாதவ் (43) உள்ளிட்டவர்களின் நிதானமான ஆட்டத்தால் 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி.
இந்நிலையில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி, ஆரம்பம் முதலே சற்றுத் தடுமாறியது அம்பத்தி ராயுடு, (22) மற்றும் கேதார் ஜாதவ் (24) ஆகியோர் மாத்திரமே ஒரளவு சிறப்பாக ஆடினர். ஒரு கட்டத்தில் 119 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சென்னை அணியின் வெற்றியை தனது அதிரடியால் உறுதிப்படுத்தினார் டுவைக் பிராவோ.
பிராவோ 30 பந்துகளில் 3 நான்கு ஓட்டங்கள், 7 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 68 ஓட்டங்களைப் பெற்றுக்கொணடுத்தார்.
பிராவோ ஆட்டமிழக்கவே, இறுதி ஓவரில் 7 ஒட்டங்கள் தேவை என்ற நிலையில், 13ஆவது ஓவரில் இடது காலில் காயம் ஏற்பட்ட காரணமாக துடுப்பாட்டத்தை இடைநிறுத்தி சென்ற கேதார் ஜாதவ் மீண்டும் களமிறங்கினார்.
இறுதி ஓவரின் நான்காவது பந்துகளில் ஒரு ஆறு ஓட்டம், ஐந்தாவது பந்தில் ஒரு நான்கு ஓட்டம் என ஒரு பந்து மீதமிருக்க சென்னை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார் ஜாதவ். ஆட்ட நாயகனாக பிராவோ தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
45 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago