Shanmugan Murugavel / 2021 ஜூன் 21 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

நேற்றிரவு நடைபெற்ற பிரெஞ்சு குரான் பிறீயில், நடப்புச் சம்பியனான லூயிஸ் ஹமில்டனை இரண்டு தடவைகள் முந்தி றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றுள்ளார்.
இப்பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன் ஆரம்பித்திருந்தபோதும், முதலாவது வளைவிலேயே முன்னிலையை மெர்சிடீஸ் அணியின் ஹமில்டனிடம் பறிகொடுத்திருந்தார்.
எனினும், முதன் முறை டயர் மாற்றும்போது பிரித்தானியாவின் ஹமில்டனை முந்தியிருந்த வெர்ஸ்டப்பன், இரண்டாவது முறை டயர் மாற்றும்போது முன்னிலையை மீள இழந்திருந்தார்.
எவ்வாறெனினும், இறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றில் மீண்டும் முன்னிலையைப் பெற்ற வெர்ஸ்டப்பன், பந்தயத்தை வென்றிருந்தார்.
இப்பந்தயத்தில் இரண்டாமிடத்தை ஹமில்டன் பெற்றதோடு, மூன்றாமிடத்தை வெர்ஸ்டப்பனின் சக றெட் புல் அணியின் ஓட்டுநரான சேர்ஜியோ பெரேஸ் பெற்றார்.
இதேவேளை, இப்பந்தயத்தின் முடிவில் இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 131 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் வெர்ஸ்டப்பன் காணப்படுகின்றார். 119 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஹமில்டனும், 84 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மெக்ஸிக்கோவின் பெரேஸும் காணப்படுகின்றனர்.
22 minute ago
31 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
36 minute ago
2 hours ago