2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பி.எஸ்.எல்: லாகூர் குவாலன்டர்ஸின் அணித்தலைவராக அஃப்ரிடி

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 21 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் இருபதுக்கு – 20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எதிர்வரும் பருவகாலத்துக்கான (பி.எஸ்.எல்) லாகூர் குவாலன்டர்ஸ் அணியின் தலைவராக ஷகீன் ஷா அஃப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில், கடந்த இரண்டு பருவகாலங்களாக குவாலன்டர்ஸின் அணித்தலைவராக இருந்த சொஹைல் அக்தரையே 21 வயதான அஃப்ரிடி பிரதியிடுகின்றார்.

இதற்கு முதல் எந்த சிரேஷ்ட அணித்தலைமைப் பொறுப்பையும் வகித்திருக்காத அஃப்ரிடி, 16 வயதுக்குட்பட்டோருக்கான பிராந்திய அணியொன்றுக்கே தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X