Editorial / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், மைன்ஸ் 05 அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பெயார்ண் மியூனிச் வென்றது. பெயார்ண் மியூனிச் சார்பாக, லியோன் கொரெட்ஸ்கா, தியாகோ அல்கான்டரா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மைன்ஸ் 05 அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோன் போல் பொய்ஸியஸ் பெற்றார்.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஹெர்தா பேர்லின் அணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் சமப்படுத்தியிருந்தது. பொரூசியா டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜடோன் சாஞ்சோ பெற்றதோடு, ஹெர்தா பேர்லின் சார்பாகப் பெறப்பட்ட கோலை சலமன் கல்லோயு பெற்றிருந்தார்.
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago