Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 21 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (பீபா) தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஆசிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவரான ஷேய்க் சல்மான் பின் எப்ராஹிம் அல்-காலிபாவுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது என, கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
பீபாவின் பதில் தலைவராகக் கடமையாற்றும் இஸா ஹலயடோவிடமே, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
பஹ்ரைனின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேய்க் சல்மான், 2011ஆம் ஆண்டு அந்நாட்டில் இடம்பெற்ற ஜனநாயகத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தடகள வீரர்களை அடையாளங்கண்டு, அவர்களில் 150க்கும் மேற்பட்டோரை சிறைப்படுத்தி, துன்புறுத்திய சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்தே இந்த எதிர்ப்பு எழுப்பப்பட்டுள்ளது.
பீபாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் தொடர்பிலும், தவறான கொடுப்பனவுகளில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் காரணமாகவும், பீபாவின் தலைவரான செப் பிளட்டர், 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, புதிய தலைவரைத் தெரிவதற்கான தேர்தல், அடுத்தாண்டு பெப்ரவரியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago