2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பார்சிலோனா பகிரங்கத் தொடர்: இறுதிப் போட்டியில் நடால் - நிஷிகோரி

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பார்சிலோனா பகிரங்க டென்னிஸ் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டிக்கு, ஸ்பெய்னின் ரபேல் நடால் தகுதிபெற்றுள்ளார். இதன்மூலம், நடப்புச் சம்பியனான ஜப்பானின் கீ நிஷிகோரியை அவர் இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளார்.

தனது அரையிறுதிப் போட்டியில் ஜேர்மனின் பிலிப் கோல்ஷெய்பெரை எதிர்கொண்ட நடால், 6-3, 6-3 என்ற செட் கணக்கில் இலகுவான நேரடி செட் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

எனினும், இந்தப் போட்டியில் வெற்றிபெற்றாலும், தான் விளையாடிய முறை குறித்து அவர் திருப்தியை வெளியிட்டிருக்கவில்லை. 'இன்று நான், இந்தத் தொடரில் எனது மோசமான விளையாட்டை விளையாடினேன். நான் விளையாடிய விதம் எனக்குப் பிடிக்கவில்லை, ஏனெனில், ஏராளமான தவறுகளை நான் செய்தேன்" என்றார்.

பிரான்ஸைச் சேர்ந்த பெனொய்ட் பெய்ரேவைத் தோற்கடித்துவிட்டு, இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ள நிஷிகோரி, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நிலையில், அவர் இந்த ஆண்டில் சிறப்பாக விளையாடி வருவதாகத் தெரிவித்த நடால், அவரைத் தோற்கடிப்பது கடினமானது எனவும் உலகில் மிகச்சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர் எனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .