Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
றக்பி உலகக் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டிக்கு, அவுஸ்திரேலிய அணி தகுதிபெற்று, நியூசிலாந்து அணியை எதிர்வரும் சனிக்கிமையன்று எதிர்கொள்ளவுள்ளது. ஆர்ஜென்டினாவுக்கெதிரான அரையிறுதிப் போட்டியையே அவுஸ்திரேலிய அணி வெற்றிகொண்டது.
80,025 இரசிகர்கள் பார்வையிட, இலண்டனின் ட்டுவிக்கென்ஹாம் அரங்கில் இப்போட் இடம்பெற்றிருந்தது. விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில், அவுஸ்திரேலிய அணி 29-15 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
உலகக் கிண்ண வரலாற்றில் தனது இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பங்குபற்றிய ஆர்ஜென்டி அணி, ஆரம்பத்திலிருந்தே அழுத்தத்துக்குள்ளாக்கப்பட்டது.
2ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற 'ட்ரை" ஒன்றின் மூலம் தனது புள்ளிகளைப் பெற்ற அவுஸ்திரேலிய அணி, தொடர்ச்சியாக புள்ளிகளைப் பெற்றது. ஆனால், இரண்டு அணிகளுமே வேகமாகவும் ஆக்ரோஷமாகவும் விளையாடியதன் காரணமாக, மிகவும் விறுவிறுப்பானதாக முதற்பாதி அமைந்தது. முதற்பாதி முடிவில் அவுஸ்திரேலிய அணி, 19-9 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியிலும் விறுவிறுப்பான போட்டி இடம்பெற, ஆர்ஜென்டின அணியும் போராட்டத்தை வெளிப்படுத்தி, ஒரு கட்டத்தில் 55ஆவது நிமிடத்தில் 22-15 என்ற நிலை காணப்பட்டது. எனினும், உச்சபட்ச திறமையை வெளிப்படுத்திய அவுஸ்திரேலிய அணி, இறுதியில் 29-15 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
ஏற்கெனவே, இவ்வாண்டு இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளில் அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளே இறுதிப் போட்டியில் பங்குபற்றியிருந்த நிலையில், இவ்விரு அணிகளும் இவ்வாண்டில் இரண்டாவது முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியொன்றில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago