Editorial / 2026 ஏப்ரல் 29 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் நடைபெற்று வரும் 6-வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (Asian Beach Games), இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய விமானப்படை வீராங்கனை நிபுனி வசனா தர்மதாச தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மல்யுத்தப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட அவர், இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த வியட்நாமிய வீராங்கனையைத் தோற்கடித்து இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தார்.
2026-ஆம் ஆண்டு நடைபெற்று வரும் இந்த ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டித் தொடரில், இலங்கை வென்றுள்ள முதல் தங்கப் பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
விமானப்படையைச் சேர்ந்த இந்த வீராங்கனையின் சாதனைக்காக விளையாட்டுத் துறை அதிகாரிகள், சக வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago