Editorial / 2023 மே 25 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எலிமினேட்டர் போட்டியில் வெளியேற்றி உள்ளது மும்பை இந்தியன்ஸ். இந்நிலையில், மாம்பழங்களுடன் போஸ் கொடுத்து நவீன்-உல்-ஹக்கை ட்ரோல் செய்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள். இந்தப் படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது.
அந்த படத்தில் மேசையில் மூன்று மாம்பழங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேசையை சுற்றி மும்பை அணி வீரர்களான விஷ்ணு வினோத், சந்தீப் வாரியர் மற்றும் குமார் கார்த்திகேயா ஆகியோர் அமர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கண்களையும், மற்றொருவர் வாயையும், மற்றொருவர் காதையும் மூடி இருப்பது போல போஸ் கொடுத்துள்ளனர். ‘மாம்பழங்களின் இனிதான பருவம்’ என இதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் சந்தீப்.
காரணம் என்ன? நடப்பு சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடிய 43-வது லீக் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. அப்போது களத்தில் லக்னோ பவுலர் நவீன்-உல்-ஹக் மற்றும் ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு இடையில் வார்த்தைப் போர் ஏற்பட்டது. அந்தப் போட்டி முடிந்ததும் களத்தில் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் கோலிக்கு இடையில் மோதல் வெடித்தது. நடப்பு ஐபிஎல் சீசனில் ஆட்டக்களம் அனல் பறந்த தருணம் அது.
அதன் பிறகு விராட் கோலி ஆட்டத்தில் தடுமாறும் போதும், பெங்களூரு அணி தோல்வியை தழுவும் போதும் மாம்பழங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து ‘இன்பமாய் இருக்குதய்யா’ என சொல்வது போல பதிவிட்டு வந்தார் நவீன்-உல்-ஹக். அதே நேரத்தில் அவர் களத்தில் ஃபீல்ட் செய்யும் போது ‘கோலி.. கோலி..’ என ரசிகர்கள் முழக்கமிட்டு வந்தனர். மறுபக்கம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தில் பெங்களூரு - குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சுப்மன் கில் பதிவு செய்த சதத்திற்கு வாழ்த்து தெரிவிப்பது போல ‘பிரின்ஸ்? அல்லது கிங்’ என ஒரு பதிவு பகிரப்பட்டது. இது கோலியை இகழும் வகையிலான பதிவு. இப்படியாக மோதல் நீண்டது.
இந்த நிலையில் நேற்று (24) லக்னோ - மும்பை இடையிலான எலிமினேட்டர் போட்டியில் லக்னோ வெளியேறியது. அது முதலே நவீன்-உல்-ஹக், கம்பீர், லக்னோ அணியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். (நன்றி த ஹிந்து)
28 minute ago
33 minute ago
45 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
33 minute ago
45 minute ago
48 minute ago