Shanmugan Murugavel / 2021 மே 25 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் முன்களவீரரான ஈடின் ஹஸார்ட், தனது முன்னாள் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சிக்கு செல்ல விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐந்தாண்டு ஒப்பந்தமொன்றில் கடந்த 2019ஆம் ஆண்டு செல்சியிலிருந்து 30 வயதான ஹஸார்ட்டை றியல் மட்ரிட் கைச்சாத்திட்ட நிலையில், றியல் மட்ரிட்டில் அடிக்கடி காயங்களுக்குள்ளாகும் ஹஸார்ட் 30 போட்டிகளில் நான்கு கோல்களையே பெற்றுள்ளார்.
இந்நிலையில், செல்சிக்காக 245 போட்டிகளில் 85 கோல்களை ஹஸார்ட் பெற்றிருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
35 minute ago
46 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
46 minute ago
59 minute ago