2025 ஜூலை 21, திங்கட்கிழமை

முதலாவது டெஸ்டில் இனிங்ஸால் அயர்லாந்தை வீழ்த்திய இலங்கை

Shanmugan Murugavel   / 2023 ஏப்ரல் 18 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இனிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் இலங்கை வென்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், காலியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 6 விக்கெட்டுகளை இழந்து 591 ஓட்டங்களைப் பெற்றபோது தமது இனிங்ஸை இடைநிறுத்தியது.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, பிரபாத் ஜெயசூரிய (7), விஷ்வ பெர்ணாண்டோ (2), ரமேஷ் மென்டிஸிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இன்றைய மூன்றாம் நாள் ஆரம்பத்தில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், லொர்கன் டக்கர் 45, ஜேம்ஸ் மக்கொலம் 35, ஹரி டெக்டர் 34 ஓட்டங்களைப் பெற்றனர்.

இந்நிலையில் பொலொ ஒன் முறையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து, ரமேஷ் மென்டிஸ் (4), பிரபாத் ஜெயசூரிய (3), விஷ்வ பெர்ணாண்டோவிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 168 ஓட்டங்களையே பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ஹரி டெக்டர் 42, ஜோர்ஜ் டொக்ரல் 32, கேர்ட்டிஸ் கம்பர் 30, மார்க் அடைர் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களைப் பெற்றனர்.

இப்போட்டியின் நாயகனாக பிரபாத் ஜெயசூரிய தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X