Shanmugan Murugavel / 2021 ஜூன் 06 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் நியூசிலாந்து காணப்படுகின்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியானது லோர்ட்ஸில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்த நிலையில், நேற்று முன்தினம் மழை காரணமாக ஆட்டம் இடம்பெறவில்லை.
இந்நிலையில், தமது முதலாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றவாறு நேற்றைய நான்காம் நாளை ஆரம்பித்த இங்கிலாந்து, ஆரம்பத்திலேயே அணித்தலைவர் ஜோ றூட்டை 42 ஓட்டங்களுடன் கைல் ஜேமிஸனிடம் இழந்தது.
பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் ஒலி போப்பும், அடுத்து வந்த டான் லோரன்ஸ், ஜேம்ஸ் பிறேஸி ஆகியோரும் டிம் செளதியிடம் விழ இங்கிலாந்து தடுமாறியது. இந்நிலையில், ஒலி றொபின்ஸனின் இணைப்பில் றோறி பேர்ண்ஸ் இனிங்ஸை நகர்த்தினார்.
இதையடுத்து 42 ஓட்டங்களுடன் றொபின்ஸன் செளதிடம் வீழ்ந்ததோடு, அடுத்து வந்த மார்க் வூட்டும் ஜேமிஸனிடம் உடனே வீழ்ந்தார். பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் நீல் வக்னரிடம் ஸ்டூவர்ட் ப்ரோட் வீழ்ந்தார்.
இந்நிலையில், ஜேம்ஸ் அன்டர்சனின் பங்களிப்பில் சதத்தைப் பூர்த்தி செய்த பேர்ண்ஸ் இறுதியாக 132 ஓட்டங்களுடன் விழ, சகல விக்கெட்டுகளையும் இறுதியில் 275 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் இங்கிலாந்து பெற்றது.
பதிலுக்கு, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூசிலாந்து, டெவோன் கொன்வேயையும், அணித்தலைவர் கேன் வில்லியம்ஸனையும் றொபின்ஸனிடம் இழந்த நிலையில், நேற்றைய நான்காம் நாளில் 2 விக்கெட்டுகளை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்றவாறு உள்ளது. டொம் லேதம் 30, நீல் வக்னர் இரண்டு ஓட்டங்களுடன் களத்திலுள்ளனர்.
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago