2025 மே 19, திங்கட்கிழமை

முதலில் துடுப்பெடுத்தாடவுள்ள அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 08 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் தற்போது ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்டில் அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பற் கமின்ஸ், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

இலங்கையணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் கமிந்து மென்டிஸ், மகேஷ் தீக்‌ஷன, பிரபாத் ஜெயசூரிய ஆகியோர் அறிமுகத்தை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த போட்டியில் விளையாடிய தனஞ்சய டி சில்வா, அசித பெர்ணாண்டோ, லசித் எம்புல்தெனிய, ஜெஃப்ரி வன்டர்சேயை கமிந்து மென்டிஸ், ராஜித, ஜெயசூரிய, தீக்‌ஷன ஆகியோர் பிரதியிட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X