2025 மே 19, திங்கட்கிழமை

முத்தரப்புத் தொடர்: இறுதிப் போட்டியில் நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2022 ஒக்டோபர் 12 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், பங்களாதேஷ் பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.

கிறைஸ்ட்சேர்ச்சில் இன்று நடைபெற்ற பங்களாதேஷுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளதுடன், பங்களாதேஷ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷின் அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸன், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, கிளென் பிலிப்ஸின் 60 (24), டெவொன் கொன்வேயின் 64 (40), பின் அலென்னின் 32 (19), மார்டின் கப்திலின் 34 (27) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 209 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் சார்பாக ஷகிப் மாத்திரமே 70 (44) ஓட்டங்களைப் பெற்றதோடு, ஏனையோர் அடம் மில்ன் (3), மிஷெல் பிறேஸ்வெல் (2), பதிலணித்தலைவர் டிம் செளதியிடம் (2) குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளைப் பறிகொடுக்க 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களையே பெற்ற பங்களாதேஷ் 48 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக கிளென் பிலிப்ஸ் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X