Shanmugan Murugavel / 2021 ஜூன் 23 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முன்னிலைக்கு இந்தியாவும், நியூசிலாந்தும் போராடி வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இப்போட்டியில் நேற்று முன்தின ஆட்டமானது மழை காரணமாக முழுமையாக இடம்பெறவில்லை.
இந்நிலையில், நேற்றைய ஐந்தாம் நாளை, தமது முதலாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றவாறு நியூசிலாந்து ஆரம்பித்தது.
சிறிது நேரத்திலேயே மொஹமட் ஷமியிடம் றொஸ் டெய்லரை நியூசிலாந்து இழந்ததுடன், குறிப்பிட்ட நேரத்தில் ஹென்றி நிக்கொல்ஸை இஷாந்த் ஷர்மாவிடம், உடனேயே பி.ஜெ. வட்லிங்கை ஷமியிடம் இழந்து தடுமாறியது.
பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் கொலின் டி கிரான்ட்ஹொம்மும், அடுத்து வந்த கைல் ஜேமிஸன் 21 ஓட்டங்களுடன் ஷமியிடம் விழ நியூசிலாந்து மேலும் தடுமாறியது.
இவற்றுக்கு மத்தியிலும் அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் நிலைத்து நின்ற நிலையில் பின்னர் 49 ஓட்டங்களுடன் இஷாந்திடம் அவரும் வீழ்ந்ததுடன், குறிப்பிட்ட நேரத்தில் நீல் வக்னரும் இரவிச்சந்திரன் அஷ்வினிடம் வீழ்ந்தார்.
இந்நிலையில், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களை பெற்ற டிம் செளதி, இறுதியாக இரவீந்திர ஜடேஜாவிடம் விழ சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 249 ஓட்டங்களையே நியூசிலாந்து பெற்றது.
பதிலுக்கு, தமது முதலாவது இரண்டாவது இனிங்ஸில் களமிறங்கிய இந்தியா நிதானமாக ஆரம்பித்தபோதும் ஷுப்மல் கில்லை சிறிது நேரத்தில் டிம் செளதியிடம் இழந்தது.
இதையடுத்து ரோஹித் ஷர்மாவும், செட்டேஸ்வர் புஜாராவும் இனிங்ஸை நகர்த்திய நிலையில், 30 ஓட்டங்களுடன் செளதியிடம் ரோஹித் வீழ்ந்தார்.
அந்தவகையில், நேற்றைய ஐந்தாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றவாறு தமது இரண்டாவது இனிங்ஸில் இந்தியா காணப்படுகின்றது. தற்போது களத்தில், புஜாரா 12, அணித்தலைவர் விராட் கோலி எட்டு ஓட்டங்களுடன் காணப்படுகின்றனர்.
22 minute ago
31 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
36 minute ago
2 hours ago