Shanmugan Murugavel / 2022 மே 23 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில், மிர்பூரில் இன்று ஆரம்பமான இரண்டாவது போட்டியின் இன்றைய முதல் நாள் முடிவில் முன்னிலையில் பங்களாதேஷ் காணப்படுகின்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷின் அணித்தலைவர் மொமினுல் ஹக், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பங்களாதேஷ், கசின் ராஜித (3), அசித பெர்ணாண்டோவிடம் (2) வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியது.
பின்னர் முஷ்பிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸின் பிரிக்காத இணைப்பாட்டத்தின் மூலம் மீண்டு முதல் நாள் முடிவில் தமது முதலாவது இனிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ரஹீம் 115, தாஸ் 135 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளனர்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026