2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

முன்வரிசை வீரர்களுக்கு பீற்றர்சன் கண்டனம்

Editorial   / 2017 ஜூலை 20 , பி.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணிக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் முன்வரிசைத் துடுப்பாட்ட வீரர்கள், ஈடுபாடற்ற வகையில் விளையாடினர் என, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் கெவின் பீற்றர்சன் விமர்சித்துள்ளார். 

இந்நிலையில், அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ள 3ஆவது டெஸ்டில், ஜேஸன் றோய், டேவிட் மலன் ஆகியோரைச் சேர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கேட்டன் ஜெனிங்ஸ், இத்தொடரின் 4 இனிங்ஸ்களில், 44 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளார். 3ஆம் இலக்கத் துடுப்பாட்ட வீரர் கரி பலன்ஸ், அவரது கடந்த 11 இனிங்ஸ்களில், அரைச்சதத்தைப் பெறவில்லை. 

“மோசமான டெஸ்ட் அணியொன்றை அவர்கள் தெரிவுசெய்தனர். லோர்ட்ஸில் இடம்பெற்ற போட்டியில் அவர்கள் வென்றனர் என்பது எனக்குத் தெரியும், ஆனால், ஜோ றூட்டின் அற்புதமான விளையாட்டினாலேயே அவர்கள் வென்றனர். 

“அற்புதமான தனிநபர்கள் அவ்வணியில் இருக்கின்றனர். ஆனால், அணியாக அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டிய அளவுக்கு அவர் விளையாடவில்லை. அந்தத் துடுப்பாட்ட வரிசையில், சில ஓட்டைகளும் உள்ளன” என்று தெரிவித்தார். 

முன்வரிசை வீரர்கள், மெதுவாக விளையாடுவது பொருத்தமற்றது எனத் தெரிவித்த பீற்றர்சன், அடித்தாடும் வீரர்களைச் சேர்க்கும் போது, பந்துவீச்சாளர்கள் சிந்திக்க ஆரம்பிப்பர் என்றும் குறிப்பிட்டார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .