2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முழு ஊதியத்தையும் இழந்தது இந்தியா

Simrith   / 2023 ஜூன் 12 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய இந்திய, அவுஸ்திரேலிய அணிகள் குறித்த நேரத்துக்குள் பந்துவீசி முடிக்கத் தவறியதால் இரு அணிகளுக்கும்  ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

லண்டனில் நடைபெற்ற இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 209 ஓட்டங்களால் வெற்றியீட்டி சம்பியனாகியமை குறிப்பிடத்கத்கது.

நேற்று முடிவடைந்த இப்போட்டியில் குறித்த நேரத்துக்குள் பந்துவீசி முடிக்கத் தவறியமைக்காக இந்திய வீரர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 100 சதவீதமும் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு ஊதியத்தில் 80 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இன்று (12) தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்திய அணியினர் இப்போட்டிக்கான தமது முழு ஊதியத்தையும் இழந்துள்ளனர். 

இந்தியா குறித்த நேரத்துக்குள் 5 ஓவர்கள் குறைவாகவும் அவுஸ்திரேலியா 4 ஓவர்கள் குறைவாகவும் வீசியதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா மற்றும் அவுஸ்தரேலிய அணித்தலைவர் பெட் கமின்ஸ் ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் மேலதிக விசாரணைகளை நடாத்தவில்லையென ஐசிசி தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனது ஆட்டமிழப்புக்கு காரணமான பிடி குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்ட இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு போட்டி ஊதியத்தில் மேலும் 15 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு ஒரு ஒழுக்கமீறல் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .