Shanmugan Murugavel / 2022 ஜூலை 25 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த இந்தியா, ட்ரினிடாட்டில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரை இந்தியா கைப்பற்றியது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் நிக்கலஸ் பூரான், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். இந்திய அணி சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆவேஷ் கான் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், ஷே ஹோப்பின் 115 (135), பூரானின் 74 (77), கைல் மேயர்ஸின் 39 (23), ஷமராஹ் ப்ரூக்ஸின் 35 (36) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஷர்துல் தாக்கூர் 3 மற்றும் அக்ஸர் பட்டேல், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 312 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, பட்டேலின் ஆட்டமிழக்காத 64 (35), ஷ்ரேயாஸ் ஐயரின் 63 (71), சஞ்சு சாம்ஸனின் 54 (51), ஷுப்மன் கில்லின் 43 (49), தீபக் ஹூடாவின் 33 (36) ஓட்டங்களோடு 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், அல்ஸாரி ஜோசப், கைல் மேயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜேடன் சியல்ஸ், றொமாறியோ ஷெப்பர்ட், அகீல் ஹொஸைன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இப்போட்டியின் நாயகனாக பட்டேல் தெரிவானார்.
7 minute ago
19 minute ago
24 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
24 minute ago
32 minute ago