Shanmugan Murugavel / 2024 நவம்பர் 10 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், பார்படோஸில் இன்று (10) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜொஸ் பட்லர் தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், சஹிப் மஹ்மூட் (4), அடில் ரஷீட் (3), லியம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஒவெர்ட்டனிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் நிக்கலஸ் பூரானின் 38 (29), றொமாரியோ ஷெப்பர்ட்டின் ஆட்டமிழக்காத 35 (22), குடகேஷ் மோட்டியின் 33 (14), அன்ட்ரே ரஸலின் 30 (17) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 183 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, பில் ஸோல்டின் ஆட்டமிழக்காத 103 (54), ஜேக்கப் பெத்தெல்லின் ஆட்டமிழக்காத 58 (36) ஓட்டங்களோடு 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஸோல்ட் தெரிவானார்.
23 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
7 hours ago