Shanmugan Murugavel / 2025 ஜூலை 21 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஜமைக்காவில் திங்கட்கிழமை (21) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் மிற்செல் மார்ஷ், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார். அவுஸ்திரேலிய அணி சார்பாக மிற்செல் ஓவன் அறிமுகத்தை மேற்கொண்டார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், றொஸ்டன் சேஸின் 60 (32), அணித்தலைவர் ஷே ஹோப்பின் 55 (39), ஷிம்ரோன் ஹெட்மயரின் 38 (19) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் பென் டுவார்ஷுய்ஸ் 4-0-36-4, நாதன் எலிஸ் 4-0-31-1, அடம் ஸாம்பா 4-0-30-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 190 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, கமரன் கிறீனின் 51 (26), ஓவனின் 50 (27) ஓட்டங்களோடு 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் குடகேஷ் மோட்டி 4-0-29-2, ஜேஸன் ஹோல்டர் 4-0-32-2, அகீல் ஹொஸைன் 4-0-35-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக ஓவன் தெரிவானார்.
8 minute ago
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
27 minute ago
36 minute ago