Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 12 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹமில்டனில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டையும் வென்ற நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளை 2-0 என்ற ரீதியில் வெள்ளையடித்தது.
444 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், இன்றைய நான்காம் நாளை 2 விக்கெட் இழப்புக்கு 30 ஓட்டங்கள் என்றவாறு ஆரம்பித்து, 203 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், றொஸ்டன் சேஸ் 64 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், நீல் வக்னர் 3, ட்ரெண்ட் போல்ட், டிம் செளதி, மிற்செல் சான்ட்னெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, நியூசிலாந்து அணியின் இரண்டாவது இனிங்ஸில் சதம் பெற்ற றொஸ் டெய்லர் தெரிவானார்.
ஸ்கோர் விபரம்:
நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்
நியூசிலாந்து: 373/10 (துடுப்பாட்டம்: ஜீட் றாவல் 84, கொலின் டி கிரன்ட்ஹொம் 58, கேன் வில்லியம்சன் 43, ட்ரெண்ட் போல்ட் ஆ.இ 37, டிம் செளதி 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷனோன் கப்ரியல் 4/119, கேமார் றோச் 3/58, மிக்கேல் கமின்ஸ் 2/57)
மேற்கிந்தியத் தீவுகள்: 221/10 (துடுப்பாட்டம்: கிரேய்க் பிறத்வெய்ட் 66, ஷேன் டெளரிச் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 4/73, டிம் செளதி 2/34, கொலின் டி கிரான்ட்ஹொம் 2/40, நீல் வக்னர் 2/73)
நியூசிலாந்து: 291/8 (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் ஆ.இ 107, கேன் வில்லியம்சன் 54 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிக்கேல் கமின்ஸ் 3/69, றொஸ்டன் சேஸ் 2/51, ஷனோன் கப்ரியல் 2/52)
மேற்கிந்தியத் தீவுகள்: 203/10 (துடுப்பாட்டம்: றொஸ்டன் சேஸ் 64 ஓட்டங்கள். பந்துவீச்சு: நீல் வக்னர் 3/42, ட்ரெண்ட் போல்ட் 2/52, டிம் செளதி 2/71, மிற்செல் சான்ட்னெர் 2/13)
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago