Editorial / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பாவனை தொடர்பாக மேலும் ஆறு ரஷ்யர்களுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு வாழ்நாட் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சோச்சியில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில், பெண்களுக்கான ஐஸ் ஹொக்கியில் காலிறுதிப் போட்டி வரை சென்ற ரஷ்ய அணியில் இடம்பெற்றிருந்த இன்னா டையுபனோக், எகத்திரினா லெபெடேவா, யெகத்திரினா பஷ்கெவிச், அன்னா ஷிபனோவா, யெகத்தெரினா ஸ்மொலென்ட்சேவா, கலினா ஸ்கிபா ஆகியோரே தடைக்குள்ளாகியுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து சோச்சி குளிர்கால ஒலிம்பிக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊக்கமருந்துப் பாவனை தொடர்பான விசாரணை ஆரம்பித்ததிலிருந்து 31 ரஷ்யர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்.
2 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago