2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மே. தீவுகளுக்கான குழாமில் கப்ரியல், சேஸ்

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 21 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் ஷனொன் கப்ரியல் இடம்பெற்றுள்ளார்.

அந்தவகையில், கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் கப்ரியல் ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் விளையாடவுள்ளார்.

இதேவேளை, றொஸ்டன் சேஸும் ODI குழாமுக்கும், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான குழாமுக்கும் அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இருபதுக்கு – 20 குழாமில் ஒபெட் மக்கோய் இடம்பெற்றுள்ளபோதும், மருத்துவ ரீதியாக தேறினாலே அவர் விளையாடவுள்ளார்.

ODI குழாம்: ஷே ஹோப் (அணித்தலைவர்), பிரண்டன் கிங், ஷமராஹ் ப்ரூக்ஸ், நிக்கலஸ் பூரான், கேசி கார்ட்டி, றொஸ்டன் சேஸ், அகீல் ஹொஸைன், யனிக் கரியாஹ், கைல் மேயர்ஸ், றொவ்மன் பவல் (உப அணித்தலைவர்), ஜேஸன் ஹோல்டர், றொமாறியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், அல்ஸாரி ஜோசப், ஷனொன் கப்ரியல்.

இ-20 குழாம்: ஜோன்ஸன் சார்ள்ஸ், பிரண்டன் கிங், ஷமராஹ் ப்ரூக்ஸ், நிக்கலஸ் பூரான், கைல் மேயர்ஸ் (உப அணித்தலைவர்), றொவ்மன் பவல் (அணித்தலைவர்), ஜேஸன் ஹோல்டர், றேமன் றீஃபயர், றொமாறியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், யனிக் கரியாஹ், அகீல் ஹொஸைன், ஷெல்டன் கோட்ரல், அல்ஸாரி ஜோசப், ஒபெட் மக்கோய்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X