Shanmugan Murugavel / 2021 ஜூன் 22 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என தென்னாபிரிக்கா வென்றுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியை தென்னாபிரிக்கா ஏற்கெனவே வென்றிருந்த நிலையில், சென். லூசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்டிலும் வென்றமையைத் தொடர்ந்தே 2-0 என தொடரை தென்னாபிரிக்கா வென்றிருந்தது.
நேற்றைய நான்காம் நாளை, தமது இரண்டாவது இனிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்களுடன் ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள், விரைவாகவே அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட், ஷே ஹோப் ஆகியோரை ககிஸோ றபாடாவிடம் இழந்தது.
பின்னர் கைல் மேயர்ஸ் 34 ஓட்டங்களுடன் றபாடாவிடம் ஆட்டமிழந்ததுடன், சிறிது நேரத்தில் ஹட்-ட்ரிக் விக்கெட்டுகளாக கிரண் பவல் 51, ஜேஸன் ஹோல்டர் மற்றும் ஜோஷுவா டா சில்வா ஆகியோர் கேஷவ் மஹராஜ்ஜிடம் வீழ்ந்தனர்.
இதையடுத்து ஜெர்மைன் பிளக்வூட்டும், கேமார் றோச்சும் இனிங்ஸை நகர்த்திச் சென்ற நிலையில், 25 ஓட்டங்களுடன் லுங்கி என்கிடியிடம் பிளக்வூட் வீழ்ந்தார். பின்னர், றோச் 27, ஜேடன் சியல்ஸ் ஏழு ஓட்டங்களுடன் மஹராஜ்ஜிடம் விழ, சகல விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களையே தமது இரண்டாவது இனிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்று 158 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக றபாடாவும், தொடரின் நாயகனாக குயின்டன் டி கொக்கும் தெரிவாகினர்.
23 minute ago
32 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
32 minute ago
37 minute ago
2 hours ago