Shanmugan Murugavel / 2016 மே 02 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சக மெர்சீடிஸ் அணிச் சாரதியான ஜெர்மனியின் நிக்கோ றொஸ்பேர்க்கினை சம்பியன்ஷிப்பில் முந்த முயலும் தனது முயற்சியை நம்பகத்தன்மை பிரச்சினைகள் பாதிக்கும் என லூயிஸ் ஹமில்டன் அச்சம் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) சோச்சியில் இடம்பெற்ற ரஷ்ய கிரான்ட் பிறிக்ஸிலும் றொஸ்பேர்க்கே வெற்றி பெற்றதோடு, இரண்டாமிடத்தை ஹமில்டன் பெற்றிருந்தார். இதன் காரணமாக சம்பியன்ஷிப்பில் றொஸ்பேர்க்கை விட 43 புள்ளிகள் ஹமில்டன் பின்தங்கியுள்ளார். இப்பந்தயத்தில் மூன்றாமிடத்தை பெராரி அணியின் சாரதியான பின்லாந்தின் கிமி றைக்கோனன் பெற்றிருந்தார்.
இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள ஹமில்டன், தன்னுடைய கவலை, றொஸ்பேர்க்கை வெல்வது அல்ல எனவும் தனது கவலையானது, சமமாகப் போட்டியிடக் கூடியவாறு கார்களை வழங்குவது பற்றியே கவலையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இது மீண்டும் நடக்காது என தான் நினைக்கிறேனா? இல்லை பிரச்சினைகள் இருக்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு பந்தயங்களில் அவரைத் தாக்கிய நம்பகத்தன்மை பிரச்சினைகளைத் தொடர்ந்தே ஹமில்டனிடமிருந்து மேற்படி கருத்துக்கள் வெளியாகியிருந்தன.
ரஷ்யாவில் தகுதிகாண் போட்டிகளின்போது ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, தரவரிசையில் 10ஆவதாகவே பந்தயத்தை ஹமில்டன் ஆரம்பித்திருந்ததோடு, இரண்டு வாரங்களுக்கு முன்னரும் இதே இயந்திரக் கோளாறு காரணமாக, பந்தயத்தை இறுதி நிலையில் இருந்தே ஆரம்பித்திருந்தார்.
இதேவேளை, ரஷ்ய பந்தயத்தின் போது பிறிதொரு இயந்திரக் கோளறையும் ஹமில்டன் எதிர்கொண்டிருந்தார். பந்தயத்தை வெல்லும் வகையில் றொஸ்பேர்க்குக்கு 7 செக்கன்களே பிந்திக் காணப்பட்டபோது நீர் அழுத்தத்தை ஹமில்டனின் இயந்திரம் இழந்ததால் பின்வாங்குமாறு அவரது அணியால் அறிவுறுத்தப்பட்டிருந்தார்.
12 minute ago
16 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
31 minute ago