Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூரில் தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பெண்ணொருவர் ஒக்டோபர் 20ஆம் திகதி பதிவு செய்த வழக்கில் இந்தியச் சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஷ்ரா கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஏழு நாட்களுக்குள் பொலிஸில் ஆஜராகுமாறு முன்னர் மிஷ்ரா கோரப்பட்டிருந்தார்.
இது பிணை வழங்கக்கூடிய குற்றம் எனவும், குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் கையளிக்கப்படும் என மத்திய பிரிவுக்கான பெங்களூர் உதவி பொலிஸ் ஆணையாளர் சந்தீப் பட்டேல் தெரிவித்துள்ளார்.
மிஷ்ரா மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பெண் மிஷ்ராவுக்கு தெரிந்தவர் எனவும், தென்னாபிரிக்கத் தொடருக்கு முன்பதாக பெங்களூரில் இந்திய அணி பயிற்சி முகாமில் ஈடுபட்டபோதே கடந்த மாத இறுதி வாரத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக நம்பப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தென்னாபிரிக்க-இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஏழாம் திகதி மொகாலியில் ஆரம்பமாகவுள்ளதுடன், இப்போட்டியில் இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராக அமித் மிஷ்ரா பங்குபற்றுவார் என எதிர்பார்க்கபடுகிறது.
8 minute ago
19 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
20 minute ago