Shanmugan Murugavel / 2023 ஜனவரி 23 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட்டுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
ஆர்சனல் சார்பாக, எடி நிகிட்டியா இரண்டு கோல்களையும், புகாயோ ஸாகா ஒரு கோலையும் பெற்றனர். யுனைட்டெட் சார்பாக, மார்க்கஸ் றஷ்ஃபோர்ட், லிஸான்ட்ரோ மார்டினெஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில் பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 50 புள்ளிகளுடன் முதலாமிடத்திலுள்ளது. நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி 45 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், 39 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நியூகாசில் யுனைட்டெட்டும், அதே புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் யுனைட்டெட் நான்காமிடத்திலும் உள்ளது. இதில், ஏனைய அணிகளை விட ஆர்சனல் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago