Shanmugan Murugavel / 2021 ஜூலை 04 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

யூரோ கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து, டென்மார்க் ஆகியன தகுதி பெற்றுள்ளன.
இத்தாலியில் இன்று அதிகாலை நடைபெற்ற உக்ரேனுடனான காலிறுதிப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றிருந்தது.
இங்கிலாந்து சார்பாக, ஹரி கேன் இரண்டு கோல்களையும், ஹரி மக்குவாயா, ஜோர்டான் ஹென்டர்சன் ஆகியோர் ஒரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை, அஸார்பைஜானில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற செக் குடியரசுடனான காலிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு டென்மார்க் தகுதி பெற்றிருந்தது.
டென்மார்க் சார்பாக, தோமஸ் டெலனி, கஸ்பர் டொல்பேர்க் ஆகியோர் தகுதி ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, செக் குடியரசு சார்பாகப் பெறப்பட்ட கோலை பற்றிக் ஸிச் பெற்றிருந்தார்.
39 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago
1 hours ago