Shanmugan Murugavel / 2021 ஜூன் 20 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

யூரோ கிண்ணத் தொடரில், ஜேர்மனியில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், நடப்புச் சம்பியன்கள் போர்த்துக்கல்லுக்கும் இடையிலான போட்டியில், 4-2 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வென்றது.
ஜேர்மனி சார்பாக, கை ஹவேர்ட்ஸ், றொபின் கொஸென்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய இரண்டு கோல்களும் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. போர்த்துக்கல் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, டியகோ ஜோட்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.
இதேவேளை, ஹங்கேரியில் நடைபெற்ற அவ்வணிக்கும், பிரான்ஸுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. பிரான்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்டோனி கிறீஸ்மன் பெற்றிருந்ததோடு, ஹங்கேரி சார்பாகப் பெறப்பட்ட கோலை அட்டிலா பியோலா பெற்றிருந்தார்.
இந்நிலையில், ஸ்பெய்னில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், போலந்துக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. ஸ்பெய்ன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அல்வரோ மொராட்டா பெற்றிருந்ததுடன், போலந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை றொபேர்ட் லெவன்டோஸ்கியும் பெற்றிருந்தனர்.
21 minute ago
30 minute ago
35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
35 minute ago
2 hours ago