2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

யுனைட்டெட் முகாமையாளராக மொரின்ஹோ விருப்பம்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 25 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்செஸ்டர் யுனைட்டெட் கழக அணியின் முகாமையாளராகப் பதவியேற்பதற்கு விரும்புவதாக, செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான ஜோஸ் மொரின்ஹோ அறிவித்துள்ளார்.

செல்சி அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து, கடந்தாண்டு டிசெம்பரில் நீக்கப்பட்ட மொரின்ஹோ, மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் முகாமையாளராக வருவதற்கான விருப்பத்தை வெளியிட்டு வந்தார். குறிப்பாக, தற்போதைய முகாமையாளரான லூயிஸ் வான் கால், இரசிகர்களிடத்தில் நம்பிக்கையை இழந்துள்ளதாகக் கருதப்படும் நிலையில், அப்பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள மொரின்ஹோவின் முகவர், யுனைட்டெட் அணி முகாமைத்துவத்துடன், பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவ்வணிக்கு முகாமையாளராகினால், முதலாவது பருவகாலத்திலேயே, சம்பியன் பட்டம் வெல்ல முடியுமென மொரின்ஹோ நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

யுனைட்டெட் நிர்வாகத்தைப் பொறுத்தவரை, களத்துக்கு வெளியே, மொரின்ஹொவின் சர்ச்சைக்குரிய நடத்தைகளே பிரச்சினையாக இருப்பதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமென அவர்கள் எதிர்பார்ப்பதாகவும், அதற்கு, மொரின்ஹோ சம்மதித்துள்ளதாதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .