Shanmugan Murugavel / 2016 ஜூன் 16 , மு.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றும் வரும் யூரோ 2016 தொடரில், போட்டியை நடாத்தும் நாடான பிரான்ஸ், முதலாவது அணியாக, இறுதிப் 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
தனது முதலாவது குழுநிலைப் போட்டியில் றோமானியாவை ஏற்கெனவே வென்றிருந்த பிரான்ஸ், அல்பானியா அணியுடனான நேற்றைய போட்டியில் வெற்றி கொண்டதன் மூலமே, இறுதிப் 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
றோமானியாவுடனான போட்டியில் குறிப்பிடத்தக்களவு பிரகாசிக்காத நட்சத்திர வீரர்களான போல் பொக்பா, அந்தோனி கிறீஸ்மன் ஆகியோர் இப்போட்டிக்கான பிரான்ஸின் ஆரம்ப 11 பேர் அணியில் இடம்பெற்றிருக்காத நிலையில், இவர்களுக்கு பதிலாக அந்தோனி மார்ஷியலும் கிங்ஸ்லி கோமானும் அணியில் இடம்பெற்றிருந்தனர்.
இத்தடவையே முதலாவதாக யூரோ கிண்ணத்தில் அறிமுகத்தை மேற்கொண்ட அல்பானியா, பிரான்ஸுடனான சிறப்பாகச் செயற்பட்டிருந்த நிலையில், போட்டியின் இறுதிக் கணங்களிலேயே பிரான்ஸினால் கோல்கள் பெறப்பட்டிருந்தன.
இடைவேளையின் போது, மார்ஷலுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட போக்பாவினால் ஆட்டம் சூடு பிடித்த நிலையில், 68ஆவது நிமிடத்தில், கோமானுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட கிறீஸ்மன்னினாலேயே, போட்டியின் இறுதியில் கோல் பெறப்பட்டிருந்தது. அதன் பின்னர், கடந்த போட்டியில் பிரான்ஸூக்கு வெற்றிக் கோலை பெற்றுக் கொடுத்திருந்த திமித்திரி பயேட் கோலைப் பெற்றிருந்தார்.
இதேவேளை, றோமானியா, சுவிற்ஸர்லாந்து ஆகிய அணிகளுக்கிடையிலான மற்றைய குழு ஏ போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. றோமானியா அணிக்கு கிடைத்த பெனால்டியை பொக்டன் ஸ்டன்சு கோலாக்கியிருந்ததோடு, சுவிற்ஸர்லாந்து சார்பாக பெறப்பட்ட கோலை அட்மிர் மெஹ்மெடி பெற்றிருந்தார்.
இந்நிலையில், ஸ்லோவாக்கியா, ரஷ்யா ஆகிய அணிகளுக்கிடையிலான குழு பி போட்டியொன்றில், 2-1 என்ற கோல்கணக்கில் ஸ்லோவாக்கியா வெற்றி பெற்றிருந்தது. ஸ்லோவாக்கியா சார்பாக பெறப்பட்ட கோல்களை மரேக் ஹம்சிக், விளாடிமிர் வெய்ஸ் ஆகியோர் பெற்றிருந்ததோடு, ரஷ்யா சார்பாகப் பெறப்பட்ட கோலினை, டெனிஸ் குளுஷக்கோவ் பெற்றிருந்தார்.
29 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
7 hours ago