Editorial / 2017 ஜூலை 17 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கு, கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என, அவ்வணியின் முகாமையாளர் ஜொஸே மொரின்யோ, தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தக் கழகத்துக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்ற பேச்சுகள் எழுந்திருந்த நிலையிலேயே, அதை அவர் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டபோது, “சாத்தியமில்லாத வீரர்களைப் பற்றிச் சிந்தித்து, என்னுடைய நேரத்தை நான் வீணாக்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.
யுனைட்டெட் அணி, பருவகாலத்துக்கு முன்னரான பயிற்சிகளுக்காக, ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றுள்ள நிலையிலேயே, அங்கு வைத்து இக்கருத்துகளை அவர் தெரிவித்தார்.
ஐ.அமெரிக்காவில், லொஸ் ஏஞ்சலஸ் கலக்ஸி அணிக்கெதிரான போட்டியில், 5-2 என்ற கோல் கணக்கில், யுனைட்டெட் அணி வெற்றிபெற்றது.
27 minute ago
36 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
41 minute ago
2 hours ago