Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர்த்துக்கல் தேசிய அணியின் வீரரும், ஸ்பெயினின் ரியல் மட்ரிட் கால்பந்தாட்டக் கழகத்தின் முன் கள வீரருமான கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ தனது நாட்டுக்காகவும், கழகத்துக்காகவும் வாழ்நாளில் தனது 500வது கோலைப் பெற்றார்.
அவர் இந்த 500வது கோலை, சுவீடன் நாட்டின் சம்பியனான மல்மோ அணிக்கெதிராகவே பெற்றார். இப்போட்டி அவர் பங்கேற்கும் 753 போட்டியாக அமைந்தது. இந்தப்போட்டியில் ரியல் மட்ரிட் அணி 2-0 என்ற ரீதியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், போட்டியில் பெறப்பட்ட இரண்டாவது கோலையும் அவரே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் ரியல் மட்ரிட் அணிக்காக கடந்த ஆறு போட்டிகளில் 10 கோல்களைப் பெற்றுள்ள ரொனால்டோ, ரியல் மட்ரிட் கால்பந்தாடக் கழகத்தின் ஜாம்பவானன ராவுல், கழகத்துக்காக 741 போட்டிகளில் பங்குபற்றி பெற்ற 323 கோல்களை சமப்படுத்தியுள்ளார்.
2009ஆம் ஆண்டு 80 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு உலக சாதனைப் பெறுமதியில் வாங்கப்பட்ட ரொனால்டோ கழகத்துக்காக 308 போட்டிகளில் பங்குபற்றி 323 கோல்களைப் பெற்றதோடு, 118 கோல்களை மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்காகவும், ஸ்போர்ட்டிங் அணிக்காக 5 கோல்களையும், போர்த்துக்கல்லுக்காக 55 கோலையும் பெற்றிருந்தார்.
22 minute ago
55 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
55 minute ago
3 hours ago
3 hours ago