Shanmugan Murugavel / 2021 மே 31 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டையும், அதன் தலைவர் புளோரென்டினோ பெரஸ்ஸையும் திறந்த கடிதமொன்றில் அதன் முன்னாள் முகாமையாளர் ஸினடி ஸிடான் சாடியுள்ளார்.
றியல் மட்ரிட்டின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகும் தனது முடிவுக்கு நம்பிக்கையீனரும், ஊடகங்களுக்கு தகவல்கள் கசிய விடப்பட்டதுமே காரணமென ஸிடான் சாடியுள்ளார்.
ஸ்பானிய விளையாட்டுப் பத்திரிகையான டியாரியோ ஏ.எஸ்ஸில் நேற்று முன்தினம் வெளியாகிய குறித்த திறந்த கடிதத்திலேயே மேற்படி விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தோல்வியொன்றையடுத்து தான் அடுத்த போட்டியில் வெல்லா விட்டால் தன்னை நீக்கப் போவதாக ஊடகத்தில் அறிந்ததாகவும், இது தன்னையும், முழு அணியையும் பாதித்ததாகவும், இத்தகவல்கள் வேண்டுமென்றே ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டதாகவும், பணியாளர்களிடையே எதிர்மறை தலையீட்டை உருவாக்கியதாகவும், அவர்கள் சந்தேகங்களை, தவறான புரிந்துணர்தல்களை உருவாக்கியதாக ஸிடான் தெரிவித்துள்ளார்.
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago