Shanmugan Murugavel / 2022 ஜனவரி 11 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், றோமாவின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது.
ஜுவென்டஸ் சார்பாக, போலோ டிபாலா, மனுவல் லொக்கட்டெலி, டெஜான் குலுவென்ஸ்கி, மட்டியா டி ஸ்ஜிலோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். றோமா சார்பாக, தம்மி ஏப்ரஹாம், ஹென்றிக் மிகித்திரயான், லொரென்ஸோ பெல்லகிரினி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற லேஸியோவுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது. மிலன் சார்பாக, அலெஸான்ட்ரோ பஸ்டோனி, மிலான் ஸ்கிறினியர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை சிரோ இம்மொபைல் பெற்றிருந்தார்.
அந்தவகையில், சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 49 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலன் உள்ளதோடு, ஒரு போட்டி கூடுதலாக விளையாடியுள்ள ஏ.சி மிலன், நாப்போலி என்பன 48. 43 புள்ளிகளுடன் இரண்டாம், மூன்றாமிடங்களிலுள்ளன. 41 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லாண்டா உள்ளது.
10 minute ago
19 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
24 minute ago
1 hours ago