Editorial / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், லெகனிஸ் அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில் லெகனிஸை 1-3 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் தோற்கடித்துள்ளது.
இப்போட்டியின் ஆறாவது நிமிடத்திலேயே கோலைப் பெற்ற லெகனிஸின் உனை புஸ்டின்ஸா தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார். எனினும் கரிம் பென்ஸீமா, கஸேமீரோவின் பங்களிப்புடன் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற லூகாஸ் வஸ்கூஸ் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
பின்னர், கரிம் பென்ஸீமா, லூகாஸ் வஸ்கூஸின் பங்களிப்போடு போட்டியின் 29ஆவது நிமிடத்தில் கஸேமீரோ பெற்ற கோலோடு முன்னிலை பெற்ற றியல் மட்ரிட், போட்டியின் இறுதிக் கணங்களில் மட்டியோ கொவாசிச் விதிமுறைகளுக்கு புறம்பாகக் கையாளப்பட்ட வழங்கப்பட்ட பெனால்டியை அணித்தலைவர் சேர்ஜியோ றாமோஸ் கோலாக்க, 3-1 என்ற கோல் கணக்கில் இறுதியில் றியல் மட்ரிட் வென்றது.
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago