Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 02 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற லெய்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் வென்றது.
எவெர்ற்றன் சார்பாக பெட்டோ இரண்டு கோல்களையும், அப்துலாயி டூக்கோரே, இலிமான் என்டியாயே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 56 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் காணப்படுகின்றது. 47 புள்ளிகளுடன் ஆர்சனலும், நொட்டிங்ஹாம் பொரெஸ்டும் காணப்படுகின்றபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் இரண்டாமிடத்தில் ஆர்சனலும், மூன்றாமிடத்தில் பொரெஸ்டும் காணப்படுகின்றன. நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியும், நியூகாசில் யுனைட்டெட்டும் தலா 41 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் நான்காமிடத்தில் சிற்றியும், ஐந்தாமிடத்தில் நியூகாசில் யுனைட்டெட்டும் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட பொரெஸ்டும், நியூகாசிலும் தலா ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளது.
20 minute ago
38 minute ago
43 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago
43 minute ago
44 minute ago