Editorial / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற லெய்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றிருந்தது.
ஆர்சனல் சார்பாக, மெசூட் ஏஸில் ஒரு கோலையும் பியர் எம்ரிக் அபுமெயாங் இரண்டு கோல்களையும் பெற்றதோடு, லெய்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இப்போட்டியின் முடிவில் இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் அனைத்து அணிகளும் தலா 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 23 புள்ளிகளுடன் பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் மன்செஸ்டர் சிற்றி முதலிடத்தில் உள்ளதுடன், 23 புள்ளிகளையே பெற்றபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் லிவர்பூல் இரண்டாமிடத்தில் உள்ளதுடன், செல்சி, ஆர்சனல், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகியன தலா 21 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் முறையே மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடங்களில் காணப்படுகின்றன.
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago