Editorial / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் முகாமையாளரான ஜுலென் லொபெதெகியை, நான்கரை மாதங்களில் அவ்வணி நீக்கியுள்ளது.
ஸ்பெய்ன் தேசிய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்சியாளரான லொபெதெகி, றியல் மட்ரிட்டின் முன்னாள் முகாமையாளர் ஸினடி ஸிடனை இவ்வாண்டு ஜூனிலேயே பிரதியீடு செய்திருந்தபோதும் பார்சிலோனாவுக்கெதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை பெற்ற தோல்வியுடன் சேர்த்து கடந்த ஆறு போட்டிகளில் ஐந்தில் தோல்வியைத் தளுவியிருந்தார்.
அந்தவகையில், கடந்த மூன்றாண்டுகளாக சம்பியன்ஸ் லீக்கின் சம்பியன்களாகவிருக்கும் றியல் மட்ரிட், லா லிகா புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாமிடத்தில் காணப்படுகின்ற நிலையில் 2001-02ஆம் ஆண்டு பருவகாலத்துக்கு பின்னர் றியல் மட்ரிட்டின் மோசமான பருவகால ஆரம்பம் இதுவாகும்.
இந்நிலையில், றியல் மட்ரிட்டின் பி அணியான கஸ்டிலாவின் பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான சன்டியாகோ ஸ்கொலாரி, லொபெதெகியை தொழில்முறையாக பிரதியீடு செய்யவுள்ளார்.
பயிற்சி அமர்வொன்றில் லொபெதெகி நேற்று பங்கேற்றிருந்தபோதும் அவரை நீக்கும் முடிவு அன்று பின்னர் இடம்பெற்ற பணிப்பாளர் சபைக் கூட்டமொன்றில் எடுக்கப்பட்டுள்ளது.
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago