2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

லா லிகாவில் பார்சிலோனாவுக்கு வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 31 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் லா லிகா கால்பந்தாட்டப் போட்டிகளில், அத்லெட்டிகோ மட்ரிட் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில், பார்சிலோனா அணி வெற்றிபெற்றது.

கெட்டபே அணிக்கெதிரான போட்டியில் அத்லெட்டிக் பில்பாவோ வெற்றிபெற, எய்பர் அணிக்கெதிரான போட்டியில் மாலகா அணி வெற்றிபெற்றது.

பார்சிலோனாவுக்கும் அத்லெட்டிகோ மட்ரிட்குமிடையிலான போட்டியில், 10ஆவது நிமிடத்தில் மட்ரிட் அணியின் கோக், கோலொன்றைப் பெற்றுக் கொடுத்தார். இதனால், ஆரம்பத்திலேயே அவ்வணி முன்னிலையைப் பெற்றது.

எனினும், 30ஆவது நிமிடத்தில், பார்சிலோனாவின் லியனொல் மெஸ்ஸி, 38ஆவது நிமிடத்தில் லூயிஸ் சுவரேஸ் பெற்றுக் கொடுத்த கோல்களுடன் முதற்பாதியை அவ்வணி, 2-1 என்ற கோல் கணக்கில் முடித்துக் கொண்டது.

இரண்டாவது பாதியில், மேலதிக கோல்கள் பெறப்படாத நிலையில், பார்சிலோனா அணி, லா லிகா புள்ளிகள் பட்டியலில், தனது முதலிடத்தின் முன்னணியை மேலும் அதிகரித்துக் கொண்டது.

இப்போட்டியில், 44ஆவது நிமிடத்தில் மட்ரிட் அணியின் பிலிபே லூயிஸ், 65ஆவது நிமிடத்தில் டியகோ கோடின் ஆகியோன், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தனர்.

கெட்பே அணிக்கும் அத்லெட்டிக் பில்பாவோ அணிக்குமிடையிலான போட்டியில், அத்லெட்டிக் பில்பாவோ அணி, 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

மாலகா அணிக்கும் எய்பர் அணிக்குமிடையிலான போட்டியில் மாலகா அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .