Shanmugan Murugavel / 2016 மே 19 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூரோப்பா லீக் இறுதிப் போட்டியின் இரண்டாவது பாதியில் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூல் அதிர்ச்சி தடுமாற்றத்தை எதிர்கொள்ள, முதலாவது பாதியின் முடிவில் ஒரு கோல் பின்தங்கியிருந்த செவில்லா, சுதாகரித்துக் கொண்டு 3-1 என்ற கோல்கணக்கில் இறுதியில் வெற்றி பெற்று, மூன்றாவது பருவகாலமாக தொடர்ச்சியாக யூரோப்பா லீக்க வென்றது.
இப்போட்டியில் லிவர்பூல் சார்பாக பெறப்பட்ட கோலை டேனியல் ஸ்டரிட்ஜ் பெற்றதோடு, செவில்லா சார்பாக, கோகே இரண்டு கோல்களையும் கெவின் கமெய்ரோ ஒரு கோலினையும் பெற்றனர்.
எவ்வாறெனினும் ஆட்டத்தின் முதற்பாதியில், செவில்லாவின் டேனியல் ரிக்கார்டோவைத் தாண்டி செல்ல முற்பட்ட லிவர்பூலின் ரொபேர்ட்டோ பிர்மினோவை கையாண்ட போதும் லிவர்பூலுக்கு பெனால்டி வழங்கப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை, இறுதியாக இடம்பெற்ற 11 யூரோப்பா லீக் தொடர்களில் 5ஐ செவில்லா வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
15 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
30 minute ago