Editorial / 2017 டிசெம்பர் 26 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றின் முதலாவது நான்கு நாள் டெஸ்ட் போட்டி, போர்ட் எலிஸபெத்தில் இலங்கை நேரப்படி இன்று மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தென்னாபிரிக்க, சிம்பாப்வே அணிகளுக்கிடையே பகல் – இரவுப் போட்டியாக நடைபெறவுள்ள இந்த டெஸ்டில் ஒவ்வொரு நாளிலும் 98 ஓவர்கள் வீசப்படவுள்ளன.
இப்போட்டியில், தென்னாபிரிக்காவின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிக்கு ஏ.பி டி வில்லியர்ஸ் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், குழாமில் டேல் ஸ்டெய்ன் இடம்பெற்றுள்ளபோதும் அணியில் இடம்பெறுவாரா என்பது சந்தேகமாகவேயுள்ளது.
மறுபக்கம், சிம்பாப்வே அணியில் இரண்டு மீற்றருக்கும் அதிகமான உயரமானவரான பிளெஸிங் முஸர்பனி அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago