Editorial / 2020 ஜனவரி 26 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், வலென்சியாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா தோற்றது.
இப்போட்டியின் 10ஆவது நிமிடத்தில், பார்சிலோனாவின் பின்களவீரர் ஜெராட் பிகேயால் வலென்சியாவின் பின்களவீரர் ஜொஸே காயா வீழ்த்தப்பட பெனால்டி வழங்கப்பட்டது. எனினும், வலென்சியாவின் முன்களவீரர் மக்ஸிமில்லியானோ கோமேஸின் உதையை பார்சிலோனாவின் கோல் காப்பாளர் மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகன் தடுத்திருந்தார்.
பின்னர் அடுத்த ஒன்பதாவது நிமிடத்தில் பார்சிலோனாவின் இன்னொரு பின்களவீரர் சேர்ஜியோ றொபேர்ட்டோ தலையால் முட்டிய பந்தானது ஜெராட் பிகேயில் பட்டுக் கோல் கம்பத்தை நோக்கிச் சென்ற நிலையில் அதை மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகன் தடுத்திருந்தார்.
அடுத்த 10ஆவது நிமிடத்தில் மக்ஸிமில்லியானோ கோமேஸின் உதையை கோல் கம்பத்தில் தட்டி விட்டிருந்த மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகன், பின்னர் வலென்சியாவின் இன்னொரு முன்களவீரர் கெவின் கமெய்ரோ மூலமாக மீண்டும் வந்த உதையையும் தடுத்திருந்தார்.
இந்நிலையில், இரண்டாவது பாதியின் மூன்றாவது நிமிடத்தில் ஜெராட் பிகே தலையால் முட்டிய பந்து மக்ஸிமில்லியானோ கோமேஸின் கால்களில் வீழ்ந்த நிலையில், அவர் அதைக் கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்திய நிலையில் அது பார்சிலோனாவின் மத்தியகளவீரர் ஜோர்டி அல்பாவில் பட்டுக் கோலான நிலையில் வலென்சியா முன்னிலை பெற்றது.
பின்னர் 77ஆவது நிமிடத்தில் வலென்சியாவின் முன்களவீரர் பெரன் டொரஸ் வழங்கிய பந்தை மக்ஸிமில்லியானோ கோமேஸ் கோலாக்க தமது முன்னிலையை வலென்சியா இரட்டிப்பாக்கியதுடன் இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்நிலையில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற கிரனெடாவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் செவில்லா வென்றது. செவில்லா சார்பாக, லூக் டி ஜொங், நொலிட்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago