Shanmugan Murugavel / 2026 மார்ச் 31 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் உள்ளூர் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற இறுதிப் போட்டியில் லயன்ஸின் சகலதுறைவீரர் பெயெர்ஸ் ஸ்வானீபோல் விமானத்தைப் பிடிப்பதற்காக போட்டியின் இடை நடுவே மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் டைட்டான்ஸ் துடுப்பெடுத்தாடும்போது இனிங்ஸ் முடிவடைய எட்டு ஓவர்கள் இருக்கையில் ஸ்வானீபோல் களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தில் வேர்ஸ்டஸ்ஷருக்காக கவுண்டி போட்டிகளில் விளையாடுவதற்காகவே ஸ்வானீபோல் சென்ற நிலையில், அவரின் திட்டங்கள் குறித்து லயன்ஸ் அறிந்திருக்கவில்லை என்பதுடன், ஞாயிற்றுக்கிழமை இரவே அதிகாரிகளிடம் தடையில்லாச் சான்றிதழ் அளிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் உபாதை காரணமாக ஸ்வானீபோல் களத்தை விட்டு வெளியேறுகின்றார் என்று நினைத்த நிலையில் அவரை மாற்றுவீரரொருவர் பிரதியிட்டிருந்தார். பின்னர் ஸ்வானீபோல் மைதானத்தை விட்டு வெளியேறியது டைட்டான்ஸ் விசாரித்ததில் தெரியவந்திருந்தது. இதனையடுத்து மாற்றுவீரரில்லாமல் 10 வீரர்களுடனே விளையாட அனுமதிக்கப்பட்ட லயன்ஸ் போட்டி முடிவடைய ஒரு பந்து இருக்கையில் தோற்றது.
19 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
1 hours ago